/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூங்காவை கண்டுபிடிக்க பெண்கள் ஒப்பாரி
/
பூங்காவை கண்டுபிடிக்க பெண்கள் ஒப்பாரி
ADDED : ஆக 08, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்,
பூங்காவை கண்டுபிடித்து தரக்கோரி, பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.
திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில், தொண்டர் இயக்கம் சார்பில், தலைவர் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் வழக்கறிஞர்கள், பெண்கள் என, 100க்கும் மேற்பட்டோர் நேற்று கூடினர்.
எல்லையம்மன் கோவில் தெருவில், 1996 - 2006ம் ஆண்டு வரை, 2 கிரவுண்ட் பரப்பளவில் இருந்த கேசவன் பூங்கா மாயமாகி உள்ளதாகவும், தனியாரிடம் இருந்து அதை மீட்கக்கோரியும், அவர்கள் கோஷம் எழுப்பினர்.
பின், மண்டல அலுவலகத்தில் நுழைந்த பெண்கள், ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஈடுபட்டது. போலீசார் வந்து அனைவரையும் கலைந்து போக செய்தனர்.