ADDED : அக் 14, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, இந்திய கால்பந்து கூட்டமைப்பின் சார்பில், தேசிய அளவில் '30வது மகளிர் சீனியர் ராஜமாதா ஜிஜாபாய் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப்' போட்டி, சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் நகரில் நடந்து வருகிறது.
இதற்கான அரையிறுதி போட்டியில், தமிழக அணி 0 - 4 என்ற கோல் கணக்கில் மணிப்பூர் அணியிடம் வீழ்ந்தது. மற்றொரு அரையிறுதியில், மேற்கு வங்க அணி 4 - 0 என்ற கோல் கணக்கில், உத்தர பிரதேசம் அணியை தோற்கடித்து, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.