/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளிர் உரிமைத்தொகை தி.மு.க., - எம்.எல்.ஏ., உறுதி
/
மகளிர் உரிமைத்தொகை தி.மு.க., - எம்.எல்.ஏ., உறுதி
ADDED : ஜன 10, 2025 12:28 AM

அசோக் நகர்சென்னை தென்மேற்கு மாவட்டம், தி.நகர் கிழக்கு பகுதி, 135 வது வட்ட தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் முன்னிட்டு, 'ஏன் வேண்டும் தி.மு.க.,' என்ற தலைப்பில் விளக்க கூட்டம், அசோக் நகர் ஏழாவது அவென்யூவில் நேற்று நடந்தது.
மாவட்ட செயலரும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வுமான வேலு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி பேசுகையில், ''அசோக் நகர் புதுார் பகுதி மக்கள் தி.மு.க., தலைவர்மீது, அன்பும் பாசமும் கொண்டவர்கள். அ.தி.மு.க.,வினருக்கு அரசியல் செய்ய தெரியவில்லை.
சட்டசபையில் அவர்கள் செயல்பாட்டை கண்டு நாங்கள் சிரிக்கிறோம். பெண்கள் மீதான குற்றங்களுக்கு இந்த அரசு உடந்தையாக இருக்காது என, சட்டசபையில் முதல்வர் கர்ஜித்தார்.
''இன்னும், மூன்று மாதங்களில் கூடுதலாக, 30 லட்சம் பேருக்கு, 1,000 ரூபாய் உரிமைத்தொகையை வழங்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்உறுதி அளித்துள்ளார்.
''நம் கட்சி சூரியன் முன் எந்த நட்சத்திரமும் ஜொலிக்காது. அது நடிகர் விஜயாக இருந்தாலும் சரிதான்,'' என்றார்.