/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவம் தரைப்பாலம் உயர்த்தி கட்ட ரூ.5 கோடியில் பணிகள் துவக்கம்
/
கூவம் தரைப்பாலம் உயர்த்தி கட்ட ரூ.5 கோடியில் பணிகள் துவக்கம்
கூவம் தரைப்பாலம் உயர்த்தி கட்ட ரூ.5 கோடியில் பணிகள் துவக்கம்
கூவம் தரைப்பாலம் உயர்த்தி கட்ட ரூ.5 கோடியில் பணிகள் துவக்கம்
ADDED : மே 07, 2025 11:56 PM

அரும்பாக்கம், அண்ணா நகர் மண்டலம், 106, 107வது வார்டுகளான அரும்பாக்கம் அருகில், சூளைமேடு பாரி தெரு வழியாக விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது.
நெற்குன்றத்தில் துவங்கும் இக்கால்வாய், அரும்பாக்கம், சூளைமேடு, எம்.எம்.டி.ஏ., காலனி வழியாக, 6 கி.மீ., துாரத்தில், அமைந்தகரை கூவத்தில் கலக்கிறது.
இக்கால்வாயை முறையாக சீரமைக்கப்படாததால், கால்வாய் முழுதும், குப்பை கழிவு நிறைந்து கிடக்கிறது.
குறிப்பாக, 106வது வார்டு, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி அருகில், சூளைமேடு, பத்மநாப நகர், தமிழர் வீதியில் செல்லும் கால்வாயில் முட்செடிகள் வளர்ந்து, புதர் மண்டி போல் காட்சியளிக்கிறது.
இதனால் மழைக்காலத்தில், கால்வாயில் ஓடும் தண்ணீர் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்துவிடும்.
அதனால், தரைப்பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என, பலதரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை கொடுத்து வந்தனர்.
இதையடுத்து, தமிழர் வீதி கூவம் தரைப்பாலத்தை சீரமைக்க, மாநகராட்சி மேம்பால துறை 4.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணியை துவக்கியது. பாலத்தின் இருபுறமும் இடித்து, 3 அடி உயரம் உயர்த்தி கட்டப்பட உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'முதற்கட்டமாக, சுவர் மற்றும் பாலத்தை இடிக்கும் பணி துவங்கியுள்ளது. பாலம் ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அவையும் அகற்றப்படும்' என்றனர்.

