sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பகுதி நேர பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் அதிர்ச்சி; அரசாணையால் பணியில் சேரமுடியாத நிலை

/

பகுதி நேர பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் அதிர்ச்சி; அரசாணையால் பணியில் சேரமுடியாத நிலை

பகுதி நேர பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் அதிர்ச்சி; அரசாணையால் பணியில் சேரமுடியாத நிலை

பகுதி நேர பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் அதிர்ச்சி; அரசாணையால் பணியில் சேரமுடியாத நிலை

8


UPDATED : மார் 16, 2026 07:03 AM

ADDED : மார் 16, 2026 06:54 AM

Google News

8

UPDATED : மார் 16, 2026 07:03 AM ADDED : மார் 16, 2026 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பகுதி நேர படிப்பில், முனைவர் பட்டம் பெற்றவர்கள், உதவிப் பேராசிரியராக தகுதியில்லை என்ற உயர்கல்வித்துறை அரசாணை, ஆயிரக்கணக்கான உதவிப் பேராசிரியர்கள் மற்றும் முனைவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, டிச., 27ல் தேர்வு நடந்தது. 48 பாடங்களுக்கான, 2,708 பணியிடங்களுக்கு, 42,064பேர் தேர்வு எழுதினர். இதில், ஐந்து பாடப்பிரிவுகளுக்கு மட்டும் பிப்ரவரி, 25ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த, 11, 12ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது.

இதில், 11 உதவிப் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஐந்து பேருக்கு மட்டும்,13ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டது. பணி நியமனம் வழங்கப்படாத, ஆறு பேரில் மூவர், பகுதி நேர படிப்பில் முனைவர் பட்டம் பெற்றதால், தகுதியற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2016ம் ஆண்டின் பல்கலை மானிய குழுவின் விதிமுறைகளால், பகுதி நேர பிஎச்.டி., பட்டம் தகுதியற்றதா என்ற சந்தேகம் எழுந்த போது, 2017ல் பல்கலை மானிய குழு விளக்கம் அளித்தது.

தொலைதுார கல்வி முறையில் பெறப்பட்ட பிஎச்.டி., பட்டங்கள் தவிர, அந்தந்த பல்கலை விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும் பகுதி நேர பிஎச்.டி., பட்டங்களும் முழு நேர பட்டங்களாகவே கருத்தப்படும் என, அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது, போதிய புரிதலின்றி பகுதிநேர முனைவர் பட்டம் தகுதியின்மை குறித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக முனைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உதகை அரசு கலைக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் மோகன் கூறியதாவது: பகுதி நேர முனைவர் பட்டம் பெற்றவர்கள் கடந்த ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், நுாற்றுக்கணக்கில் நியமனம் பெற்றுள்ளனர். இந்த நியமனங்களுக்கு கல்லுாரி கல்வி இணை இயக்குனர்களும், பல்கலைகளும் ஒப்புதல் கொடுத்த நிலையில், தற்போது தகுதியில்லை என்று சொல்வது அபத்தமானது.

தற்போது உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த,40,000க்கும் மேற்பட்டவர்களில், பாதிக்கும் மேல் பகுதிநேர முனைவர் பட்டம் பெற்றவர்கள் தான்.இந்த அரசாணையால் தேர்வர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

பகுதி நேர பிஎச்.டி., தகுதியானதே!

உயர் கல்வித்துறை அரசாணை தொடர்பாக, அந்தத் துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாவது: தற்போது வழங்கப்பட்டுள்ள, ஐந்து உதவிப் பேராசிரியர்களுக்கான நியமன ஆணை, அரசாணையின்படி தற்காலிகமானது. சான்றிதழ்களின் உண்மை தன்மைக்கு உட்பட்டே, அவர்கள் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவர்.
சான்றிதழ்களில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால், எந்த நேரத்திலும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர். இவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல், பணிமூப்பு கோர இயலாது. மீதமுள்ள பாடப்பிரிவுகளுக்கும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகே, பணிமூப்பு நிர்ணயம் செய்யப்படும்.
எனவே, பணிமூப்பு விஷயத்தில், மற்ற தேர்வர்களுக்கு தேவையற்ற அச்சம் வேண்டாம். அதேபோல, பகுதிநேர பிஎச்.டி., என்பது ரெகுலர் பிஎச்.டி., படிப்புக்கு சமம். எனவே, இந்த விவகாரத்தில், தேர்வர்களுக்கு பயம் தேவையில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us