/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லறை தோட்டம், கபர்ஸ்தான் 3 இடங்களில் பணிகள் தீவிரம்
/
கல்லறை தோட்டம், கபர்ஸ்தான் 3 இடங்களில் பணிகள் தீவிரம்
கல்லறை தோட்டம், கபர்ஸ்தான் 3 இடங்களில் பணிகள் தீவிரம்
கல்லறை தோட்டம், கபர்ஸ்தான் 3 இடங்களில் பணிகள் தீவிரம்
ADDED : நவ 12, 2025 12:19 AM

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறுபான்மையினர் நலத்திட்டங்களின் செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது.
கூட்டத்தில், சென்னை மாவட்டத்தில் தேவைக்கேற்ப கல்லறை தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் அமைத்தல், சர்ச் புதுப்பித்தல், பிரதமரின் 15 அம்ச திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
அதேபோல், துறை சார்பில் வழங்கிய கடனுதவிகள், மானியங்கள் மற்றும் மனுக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாவட்ட அலுவலர்கள் கூறுகையில், 'கொடுங்கையூரில் கல்லறை தோட்டம், கபர்ஸ்தான் மற்றும் மயானம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
'அதேபோல், மதுரவாயலில் கபர்ஸ்தான் அமைக்கப்படுகிறது. வேளச்சேரியில், 2013ல் ஒதுக்கிய இடத்திற்கு பதில் வேறு இடத்தை ஒதுக்கீடும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
'மேற்கண்ட மூன்று பணிகளை துரிதமாக முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

