/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூடார வடிவில் பஸ் நிலையம் எண்ணுாரில் பணிகள் தீவிரம்
/
கூடார வடிவில் பஸ் நிலையம் எண்ணுாரில் பணிகள் தீவிரம்
கூடார வடிவில் பஸ் நிலையம் எண்ணுாரில் பணிகள் தீவிரம்
கூடார வடிவில் பஸ் நிலையம் எண்ணுாரில் பணிகள் தீவிரம்
ADDED : ஜூலை 28, 2025 03:03 AM

எண்ணுார்:எண்ணுார் பேருந்து நிலையம், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடார வடிவில் கட்டப்பட்டு வருகிறது.
எண்ணுார் பேருந்து நிலையத்தில் இருந்து, வள்ளலார் நகர், எழும்பூர், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல வழித்தடங்களில், தினமும் 50க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பழைய பேருந்து நிலையம் சாலை மட்டத்தை காட்டிலும் தாழ்வாக இருந்ததால், சாதாரண மழைக்கே மழைநீர் தேங்கி குளமாக மாறி வந்தது.
மேலும் நாட்கணக்கில் தேங்கும் மழை நீருடன் கழிவு சேர்ந்து, சகதியாக மாறுவதால் பயணியர் கடும் அவதியடைந்து வந்தனர். கூரையும் சேதமடைந்து இருந்தது.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், கடந்தாண்டு புது பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துவங்கின. 4 கோடி ரூபாய் மதிப்பீடில் கூடார வடிவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
வரும் 15ம் தேதிக்குள் பணிகள் முழுதும் முடிந்து, பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

