/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2.81 கோடியில் ரயில்வே நடைமேம்பாலம் ஆலந்துாரில் பூமி பூஜையுடன் பணி துவக்கம்
/
ரூ.2.81 கோடியில் ரயில்வே நடைமேம்பாலம் ஆலந்துாரில் பூமி பூஜையுடன் பணி துவக்கம்
ரூ.2.81 கோடியில் ரயில்வே நடைமேம்பாலம் ஆலந்துாரில் பூமி பூஜையுடன் பணி துவக்கம்
ரூ.2.81 கோடியில் ரயில்வே நடைமேம்பாலம் ஆலந்துாரில் பூமி பூஜையுடன் பணி துவக்கம்
ADDED : ஏப் 10, 2025 12:33 AM

ஆலந்துார், ஆலந்துார் நிதிப் பள்ளி அருகில் இருந்த, எல்.சி., -15 ரயில்வே கேட், 2002ம் ஆண்டு மூடப்பட்டது. 2011ம் ஆண்டு, 5 கோடி ரூபாயில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
ரயில்வே பங்காக, 2.91 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. சுரங்கப்பாதை திட்டத்திற்கான ஒப்பந்தம் விடப்பட்டு, 2013ம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டது. அத்திட்டம் நடைமுறை சிக்கலால் நிறுத்தப்பட்டது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், மீண்டும், 2.81 கோடி ரூபாய் மதிப்பில் நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்து, 1 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்க ஒப்புதல் அளித்து ஓராண்டிற்கு மேல் ஆகியும், பணி துவக்கப்படாமல் இருந்தது.
இது குறித்து நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான அன்பரசன் தலைமையில், திட்டத்திற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இதையடுத்து, அமைச்சர் கூறியதாவது:
எல்.சி., 15 ரயில்வே கேட், 2.81 கோடி ரூபாயில் அமைகிறது. இதில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 1 கோடி ரூபாயும், மீதி நிதியை மாநகராட்சியும் அளிக்கிறது.
இந்த நடை மேம்பாலம், 37 மீட்டர் உயரம், 80 மீட்டர் நீளம் கொண்டது. படிக்கட்டுகள், 21 மீட்டரில் அமைகின்றன. இந்த பணியை, அடுத்த ஆறு மாதத்தில் முடித்து, மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
வேளச்சேரி- - பரங்கிமலை மேம்பால ரயில்வே திட்ட ஆய்வு பணிகள், ரயில்வே அதிகாரிகளுடன் அடுத்த வாரம் நடக்கிறது. அடுத்த இரண்டு மாதத்தில், ரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
ஆதம்பாக்கம், நங்கநல்லுாரில், 43 லட்சம் ரூபாயில் ஆறு மின்மாற்றிகள் புதிதாக வைக்கப்பட்டுள்ளன. அவை, இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகின்றன.
ஆலந்துாரில் அரசு கல்லுாரி அமைக்க, தாலுகா அலுவலகம் அருகில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வரும் கல்வியாண்டு கல்லுாரி துவக்கப்பட்டு, தற்காலிகமாக நேரு பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில் செயல்படும்.
ஆலந்துாரில் கண்டோன்மென்ட் அருகில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. எம்.கே.என்., சாலையில் பிரமாண்ட அமுதம் அங்காடி வரவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி தெற்கு மண்டல துணை கமிஷனர் அமித், மண்டல குழு தலைவர் சந்திரன், உதவி கமிஷனர் முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.