/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'நமக்கு நாமே' திட்டத்தில் குடிநீர் திட்ட பணி துவக்கம்
/
'நமக்கு நாமே' திட்டத்தில் குடிநீர் திட்ட பணி துவக்கம்
'நமக்கு நாமே' திட்டத்தில் குடிநீர் திட்ட பணி துவக்கம்
'நமக்கு நாமே' திட்டத்தில் குடிநீர் திட்ட பணி துவக்கம்
ADDED : நவ 13, 2025 12:33 AM
மேட்டுக்குப்பம்: ஓ.எம்.ஆர்., தேவராஜ் நகரில், 'நமக்கு நாமே' திட்டத்தில், குடிநீர் திட்ட பணி நேற்று துவங்கியது.
சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, ஓ.எம்.ஆர்., தேவராஜ் நகர், 2005ம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டது. இங்கு, 30 வீடுகள் உள்ளன.
கடந்த 2014ம் ஆண்டு, குடிநீர் திட்ட பணி துவங்கும் போது, இந்த நகர் விடுபட்டது. இதையடுத்து, 'நமக்கு நாமே' திட்டத்தில், 33 லட்சம் ரூபாயில் பணி துவங்க வாரியம் திட்டமிட்டது.
இதில், 11 லட்சம் ரூபாயை, அப்பகுதி மக்கள் செலுத்தினர். தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், கவுன்சிலர் ஏகாம்பரம் மற்றும் வாரிய அதிகாரிகள் முன்னிலையில், நேற்று பணி துவக்கியது.