/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி
/
இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி
ADDED : பிப் 02, 2025 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் அடுத்த பஞ்செட்டி அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 38. இவர், இரும்பு உருக்கு தொழிற்சாலையில், மிஷின் ஆப்பரேட்டராக பணிபுரிகிறார்.
நேற்று அதிகாலை பணியில் இருந்த அவர், நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டின் குறுக்கே கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக, கன்வேயர் பெல்ட்டில் சிக்கி, தலையில் பலத்த காயம் அடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.