ADDED : நவ 13, 2024 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர்,:கொடுங்கையூர், சோலையம்மன் கோவில், ஏழாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகம், 44. மனைவியை பிரிந்து வாழ்ந்த இவர்,
கடந்த இரு மாதங்களாக, எருக்கஞ்சேரியில் உள்ள வாட்டர் வாஷ் கடையில் வேலை செய்து வந்தார்.
நேற்று கடையை திறந்து,'சுவிட்ச் ஆன்' செய்த போது, மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளார். அங்கிருந்தோர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
கொடுங்கையூர் போலீசார் நேற்று உடலை கைப்பற்றி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

