UPDATED : ஜூலை 30, 2026 11:31 PM
ADDED : ஜூலை 30, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
சிட்லப்பாக்கம்:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் குமார், 24.
இவர், நேற்று காலை சிட்லப்பாக்கத்தில் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கீழே கிடந்த மின் ஒயரை கவனிக்காமல், மிதித்ததாக கூறப்படுகிறது. இதில், மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், அவர் இறந்தது தெரியவந்தது. சிட்லப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
