/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகை பிடிக்க சென்ற தொழிலாளி தலையில் மின் கம்பி உரசி பலி
/
புகை பிடிக்க சென்ற தொழிலாளி தலையில் மின் கம்பி உரசி பலி
புகை பிடிக்க சென்ற தொழிலாளி தலையில் மின் கம்பி உரசி பலி
புகை பிடிக்க சென்ற தொழிலாளி தலையில் மின் கம்பி உரசி பலி
ADDED : ஜூன் 24, 2025 12:10 AM
திருநின்றவூர்,
திருநின்றவூர், ஸ்ரீபதி நகரைச் சேர்ந்தவர் செல்வம், 47; கூலித்தொழிலாளி. இவர், கருத்து வேறுபாடு காரணமாக, ஐந்து ஆண்டுகளாக மனைவியை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
இவர், நேற்று மதியம் பாக்கம், காமராஜர் தெருவைச் சேர்ந்த நண்பர் வேலு, 28, என்பவருடன், அருகில் உள்ள ஆளில்லா வீட்டின் மாடியில் புகை பிடிக்க சென்றார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அந்த வீட்டின் மாடியை ஒட்டி சென்ற மின் கம்பி, தலையில் உரசியதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற வேலுவும் பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்த திருநின்றவூர் போலீசார், இருவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.