/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறு தொழில் முனைவோருக்காக திருமுடிவாக்கத்தில் பயிலரங்கம்
/
சிறு தொழில் முனைவோருக்காக திருமுடிவாக்கத்தில் பயிலரங்கம்
சிறு தொழில் முனைவோருக்காக திருமுடிவாக்கத்தில் பயிலரங்கம்
சிறு தொழில் முனைவோருக்காக திருமுடிவாக்கத்தில் பயிலரங்கம்
ADDED : நவ 19, 2025 04:17 AM
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் இணைந்து, சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு, தொழிற்பேட்டை வளாகத்தில் இன்றும், நாளையும் தொழில் முனைவோருக்கு பயிலரங்கம் நடத்துகிறது.
இதுகுறித்து, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க துணை தலைவர் ஆர்.செல்வம் கூறியதாவது:
நிறுவனத்தில் நஷ்டம் ஏற்படாத வகையில் லாபம் ஈட்டுவதற்கான விழிப்புணர்வு, தொழிற்சாலைகளின் இடர்ப்பாடுகளை கண்டறிந்து களைதல், சிறந்த தொழிலாளர்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பல பிரிவுகளில், தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சென்னை, அதை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு தொழில்முனைவோர் பங்கேற்று, பயன்பெற உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.