/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
யமாஹா சென்னை ஆலையில் 50 லட்சம் வாகனங்கள் உற்பத்தி
/
யமாஹா சென்னை ஆலையில் 50 லட்சம் வாகனங்கள் உற்பத்தி
ADDED : ஜூன் 06, 2025 12:27 AM

சென்னை, சென்னை ஒரகடத்தில் உள்ள யமஹா நிறுவன உற்பத்தி ஆலையில், இதுவரை 50 லட்சம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
மொத்தம், 177 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஆலை, 2015 முதல் செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதிக்கு முக்கிய பங்காற்றி வரும் இந்த ஆலையில், 10 ஆண்டுகளில், 50 லட்சம் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இங்கு, ரே - இசட்.ஆர்., பேசினோ மற்றும் ஏராக்ஸ் ஆகிய ஸ்கூட்டர்கள் ஆகியவை உள்நாட்டு சந்தைக்கும், எப் - இசட் சீரிஸ், சலுாட்டோ மற்றும் ஆல்பா வாகனங்கள் ஏற்றுமதிக்கும் உற்பத்தி ஆகின்றன.
உற்பத்தியில் 30 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. இந்த ஆலை ஆண்டுக்கு, 9 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. சென்னை ஆலையில், 1,500 கோடி ரூபாய் வரை, யமஹா நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
இந்நிறுவனத்திற்கு உத்தர பிரதேசத்தின் சூரஜ்பூரில் உள்ள ஆலையில், ஆண்டுக்கு ஆறு லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மொத்தம், ஆண்டுக்கு 15 லட்சம் வாகனங்களை இந்நிறுவனம் உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது.