/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
யானைக்கவுனி மேம்பாலம் மார்ச்சில் திறப்பு
/
யானைக்கவுனி மேம்பாலம் மார்ச்சில் திறப்பு
ADDED : பிப் 13, 2024 12:17 AM

சென்னை, யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம் வரும் மார்ச் மாதம் இறுதியில் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்படும் என, சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு பகுதியில் இருந்த யானைக்கவுனி மேம்பாலம் பழமை காரணமாக மிகவும் சேதமடைந்து இருந்தது.
இதனால், கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, 2016ல் மூடப்பட்டது.
இந்த பாலத்தை இடித்து, 2020ல் புது பால கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன. ஏற்கனவே இருந்த 50 மீ., பாலத்துக்கு பதிலாக 150 மீ., துாரத்திற்கு புது பாலம் கட்டப்பட்டது.
இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ''யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம் 43.77 கோடி ரூபாய் செலவில் கட்டுமான பணிகள் முடியும் நிலையில் இருக்கின்றன.
எஞ்சியுள்ள சில பணிகளையும் முடித்து, மார்ச் இறுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்க உள்ளோம்,'' என்றனர்.