/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நேற்று ஒரே நாளில் 9 விமானங்கள் ரத்து
/
நேற்று ஒரே நாளில் 9 விமானங்கள் ரத்து
ADDED : நவ 11, 2024 01:59 AM
சென்னை:சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், நேற்று ஒரே நாளில் நான்கு புறப்பாடு விமானங்கள், ஐந்து வருகை விமானங்கள் என, மொத்தம் 9 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், நேற்று காலை 9.40 மணிக்கு பெங்களூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மாலை 6.10 மணிக்கு கவுகாத்திக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இரவு 9.10 மணிக்கு டில்லிக்கு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ், இரவு 10.40 மணிக்கு கோல்கட்டா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நான்கு விமானங்கள், ரத்து செய்யப்பட்டன.
இதேபோல் நேற்று அதிகாலை 1.00 மணிக்கு புனேயில் இருந்து வரவேண்டிய ஏர் இந்தியா, காலை 9.00மணிக்கு பெங்களூரில் இருந்து வரவேண்டிய ஏர் இந்தியா, மாலை 5.35 மணிக்கு பெங்களூரில் இருந்து வரவேண்டிய ஏர் இந்தியா, இரவு 8.20 மணிக்கு டில்லியில் இருந்து வரவேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ், இரவு 10.05 மணிக்கு கோல்கட்டாவில் இருந்து வரவேண்டிய ஏர் இந்தியா ஆகிய ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
நிர்வாக காரணங்களால், இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முன்பதிவு செய்து இருந்த பயணியர் பெரும் அவதிக்குள்ளாகினர்.