/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒய்.எம்.சி.ஏ., மாவட்ட கேரம் போட்டி கீர்த்தனா, சஹானா காலிறுதிக்கு தகுதி
/
ஒய்.எம்.சி.ஏ., மாவட்ட கேரம் போட்டி கீர்த்தனா, சஹானா காலிறுதிக்கு தகுதி
ஒய்.எம்.சி.ஏ., மாவட்ட கேரம் போட்டி கீர்த்தனா, சஹானா காலிறுதிக்கு தகுதி
ஒய்.எம்.சி.ஏ., மாவட்ட கேரம் போட்டி கீர்த்தனா, சஹானா காலிறுதிக்கு தகுதி
ADDED : நவ 16, 2024 12:27 AM

சென்னை, ஒய்.எம்.சி.ஏ.,வின் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில், சீனியரில் கீர்த்தனா, சஹானா உட்பட எட்டு பேர் காலிறுதிக்கு தகுதி பெற்று உள்ளனர்.
சென்னை மாவட்ட கேரம் சங்கம் மற்றும் ஒய்.எம்.சி.ஏ., கோடம்பாக்கம் கிளை இணைந்து, மாவட்ட அளவிலான கேரம் போட்டியை, நேற்று முன்தினம் துவங்கியது. போட்டிகள், அசோக் நகர் ஒய்.எம்.சி.ஏ., கிளை வளாகத்தில் நடக்கிறது.
போட்டியில், ஆடவரில் 96 பேர், பெண்களில் 32 பேர், பதக்கம் அல்லாத பிரிவில், 112 பேர், சப் - ஜூனியர் சிறுமியரில், 30 பேர், சிறுவரில், 90 பேர் என, மொத்தம் 360 சிறுவர், சிறுமியர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று காலை சீனியர் பெண்களுக்கு காலிறுதிக்கு முந்தைய சுற்று நடந்தது. அதில், செரியன் நகர் கிளப் சஹானா, 25 - 1, 21 - 0 என்ற கணக்கில், சிட்டி போலீஸ் ஆர்த்தியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில், செரியன் நகர் கிளப் கீர்த்தனா, 22 - 18, 25 - 0 என்ற கணக்கில் சகிலாவை தோற்கடித்து தகுதி பெற்றார். சஞ்சனா, 25 - 0, 25 - 0 என்ற கணக்கில் ஜி.எஸ்.சி.ஏ., கிளப் வீராங்கனை கீர்த்தனாவை வீழ்த்தினார்.
எம்.ஐ.சி.ஏ., கிளப் வர்ஷினி, 25 - 6, 25 - 9 என்ற கணக்கில் செரியன் நகர் கிளப் கவி பிரீதியை வீழ்த்தி வெற்றி பெற்றார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.