/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிகள் இடையிலான யோகா மேடவாக்கம் அரசு பள்ளி அசத்தல்
/
பள்ளிகள் இடையிலான யோகா மேடவாக்கம் அரசு பள்ளி அசத்தல்
பள்ளிகள் இடையிலான யோகா மேடவாக்கம் அரசு பள்ளி அசத்தல்
பள்ளிகள் இடையிலான யோகா மேடவாக்கம் அரசு பள்ளி அசத்தல்
ADDED : பிப் 09, 2025 12:50 AM

சென்னை,பள்ளிகளுக்கு இடையிலான யோகாசன போட்டி, தாம்பரத்தில் உள்ள சர் மற்றும் லேடி வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
சப் - ஜூனியரில், ஐந்து முதல் ஆறாம் வகுப்புகளுக்கு, சக்ராசனம், உசர்ட்டாசனம், கருடாசனம், தண்டாசனம் மற்றும் வசிஸ்தாசனம் ஆகிய ஆசனங்களில், போட்டிகள் நடத்தப்பட்டன.
அதேபோல், ஜூனியரில், ஏழு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு, தனுராசனம், யோகா நித்திரை, வீரபத்ராசனா, ஹலசானா ஆகிய பிரிவுகளில் நடந்தன.
இருபாலருக்கான இப்போட்டியில் மேடவாக்கம் அரசு உயர்நிலை பள்ளியைச் சேர்ந்த, ஆறு முதல் 8ம் வகுப்பு பயிலும் 22 மாணவர்கள் பங்கேற்றனர்.
அனைத்து போட்டிகள் முடிவில், மேடவாக்கம் அரசு பள்ளி மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து, போட்டியில் அதிகப்படியாக ஐந்து பதக்கங்களை வென்று அசத்தினர்.
சேத்துப்பட்டு மெட்ராஸ் சேவா சாதன் பள்ளி இரண்டு பதக்கமும், சர் லேடி பள்ளி, மூன்று பதக்கமும், தாம்பரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, இரண்டு பதக்கமும் வென்றன.

