/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆலந்துார், சோழிங்கநல்லுாரில் 'ஆன்லைன்' பட்டா பெறலாம்
/
ஆலந்துார், சோழிங்கநல்லுாரில் 'ஆன்லைன்' பட்டா பெறலாம்
ஆலந்துார், சோழிங்கநல்லுாரில் 'ஆன்லைன்' பட்டா பெறலாம்
ஆலந்துார், சோழிங்கநல்லுாரில் 'ஆன்லைன்' பட்டா பெறலாம்
ADDED : மார் 15, 2024 12:26 AM
சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட அதிகார வரம்பில் ஆலந்துார், சோழிங்கநல்லுார் பகுதிகள், 2010ம் ஆண்டு வரை இருந்தன. பின், 2018 வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தன. இதையடுத்து, சென்னை மாவட்டத்தின் கீழ் வந்தன.
தமிழகத்தில், நத்தம் நிலவகைகளை கணினி மயமாக்க பல பெயரில் இருந்த மனைகளை ரயத்துவாரி மனை என, சென்னை மாவட்டம் நீங்கலாக மாற்றி, 2023ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையால் ஆலந்துார், சோழிங்கநல்லுார் மண்டலம் உள்ளிட்ட பகுதி மக்கள், 'ஆன்-லைன்' பட்டா பதிவேற்றம் செய்ய முடியாமலும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அரசாணை திருத்தம் செய்ய வேண்டும் என, ஆலந்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சருமான அன்பரசனிடம் கோரிக்கை வைத்தனர். அதேபோல, சோழிங்கநல்லுார் பகுதி மக்களும் போராடினர்.
ஓராண்டு போராட்டத்திற்கு பின், நேற்று முன்தினம், தமிழக அரசு திருத்தம் செய்த அரசாணை வெளியிட்டது.
அதில், சென்னை மாவட்டம் நீங்கலாக என்பதற்கு பதில், 2018, ஜனவரி 4க்கு முன் இருந்த சென்னை மாவட்டம் நீங்கலாக என, திருத்தம் செய்யப்பட்டது.
இந்த திருத்தம் செய்யப்பட்டதால், ஆலந்துார், சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 'ஆன்-லைன்' பட்டா பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்டிருந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

