
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூவத்துார்செங்கல்பட்டு கூவத்துார் அங்களம்மன் கோவில் பின்புறத்தில் உள்ள தனியார் மனைப்பிரிவு அருகே, நேற்று காலை உடலில் வெட்டுக்காயங்களுடன், தலை நசுக்கப்பட்ட நிலையில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலம் கிடந்தது.
தகவலறிந்து கூவத்துார் போலீசார் சடலத்தை ஆய்வு செய்தனர்.
இதில் கூவத்துார், சத்திரம்பேட்டையை சேர்ந்த பிரதீப், 23, என்பது தெரியவந்தது.
நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற பிரதீப்பை, கல்லால் தலையை நசுக்கி கொடூரமாக படுகொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.