/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலுக்கு அடியில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு
/
ரயிலுக்கு அடியில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு
ADDED : செப் 01, 2025 12:54 AM
ஆவடி:ஆவடி ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய இளம்பெண் ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு, விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன், 25; கார்பென்டர். இவரது மனைவி மேரி, 22. ஆவடியில் அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
வழக்கம்போல மேரி, நேற்று காலை மின்சார ரயிலில் வேலைக்கு சென்றுள்ளார். ஆவடி ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாவது நடைமேடையில், ஓடும் ரயிலில் இருந்து இறங்கியபோது, ரயிலுக்கு அடியில் சிக்கிய மேரி, உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆவடி ரயில்வே போலீசார் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.