/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதை கடையில் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் 'அட்மிட்'
/
நடைபாதை கடையில் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் 'அட்மிட்'
நடைபாதை கடையில் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் 'அட்மிட்'
நடைபாதை கடையில் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் 'அட்மிட்'
ADDED : ஆக 05, 2025 12:24 AM
பூக்கடை, நடைபாதை கடையில், பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மேல் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி, 21. இவர், சென்னை, பார்க் டவுன், ராசப்பா செட்டி தெருவில் தங்கி, டிரான்ஸ்போர்டில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, விடுமுறை தினம் என்பதால், பூக்கடை, ரத்தன் பஜாரில் உள்ள நடைபாதை பிரியாணி கடை ஒன்றில், பீப் பிரியாணி சாப்பிட்டுள்ளார்.
ஒரு மணி நேரத்தில், பெரியசாமிக்கு உடல் முழுதும் அலர்ஜி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் அலர்ஜி குறையவில்லை. இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, பூக்கடை போலீசார், நேற்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.