/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் படுகாயம்
/
பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் படுகாயம்
ADDED : ஆக 05, 2025 12:26 AM
அமைந்தகரை,ஷெனாய் நகரில், கல்லுாரி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் படுகாயமடைந்தார்.
ஷெனாய் நகர், பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 48; கல்லுாரி பேருந்து ஓட்டுநர். மேற்கு ஷெனாய் நகர் முதல் பிரதான சாலையோரத்தில் நிறுத்திய பேருந்தை, வழக்கம்போல் நேற்று அதிகாலை 5:20 மணிக்கு இயக்கியுள்ளார்.
அப்போது, பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. பின்பக்க சக்கரத்தில் பெண் ஒருவரின் வலது கை மற்றும் தலை முடி சிக்கியிருப்பது, குணசேகரனுக்கு தெரிந்தது.
போலீசார், அப்பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, அண்ணா நகர் போக்குவரத்து போலீசார், வழக்கு பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில், காயமடைந்த பெண், கீழ்ப்பாக்கம், அவ்வைபுரத்தைச் சேர்ந்த சரஸ்வதி, 32, என்பதும், அமைந்தகரையில் தன் மகளை பார்த்துவிட்டு, இரவு சாலையோரத்தில் பேருந்து அருகில் படுத்து துாங்கியதும் தெரிந்தது. அவரது அருகில் மதுபாட்டில்கள் கிடந்ததால், மது போதையில் இருந்தாரா, மயங்கி கீழே விழுந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.