/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகர பஸ் நடத்துனர் மாரடைப்பால் மரணம்
/
மாநகர பஸ் நடத்துனர் மாரடைப்பால் மரணம்
ADDED : ஆக 05, 2025 12:27 AM

மணலி, மாநகர பேருந்து நடத்துனர், பணியின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்தவர் பிச்சையாண்டி, 56. மாதவரம் பணிமனையில், மாநகர பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்தார்.
நேற்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து, மணலி சென்ற தடம் எண் '121 - ஏ' மாநகர பேருந்தில் பணி மேற்கொண்டிருந்தார்.
அதிகாலை, 5:30 மணிக்கு, பேருந்து மணலி வந்தபோது, நடத்துனர் பிச்சையாண்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக, ஓட்டுனர் ஏசு மற்றும் பயணியர், அவரை மீட்டு, சிகிச்சைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே பிச்சையாண்டி இறந்து விட்டதாக கூறினார். சம்பவம்குறித்து, மணலி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.