/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது
/
பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது
ADDED : டிச 08, 2025 05:49 AM

ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம், அத்துமீறிய நபர் கைது செய்யப்பட்டார்.
ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், தன் வீட்டருகே உள்ள சாலையில் கடந்த 3ம் தேதி நடந்து சென்றார். அவ்வழியாக வந்த நபர், இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி, ஆபாசமாக பேசி தப்பிச்சென்றார்.
அப்பெண்ணின் புகாரையடுத்து, ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சுல்தான் பாஷா, 35, என்பது தெரிந்தது.
அவரை, போலீசார் பிடிக்க சென்றபோது, தப்பியோட முயற்சித்தார். அப்போது தடுமாறி விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரை கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

