/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஊழியர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
/
ஊழியர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
ADDED : ஆக 22, 2025 12:18 AM

அண்ணா நகர், பெண் தோழியை ஏமாற்றிய நிறுவன ஊழியர்களை பழி தீர்ப்பதற்காக, சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்டு, பணம் கேட்டு மிரட்டியவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
மதுரவாயல், சிவந்தி ஆதித்தனார் தெருவைச் சேர்ந்தவர் பிரபு, 41. இவர், அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகார்:
அரும்பாக்கத்தில் பணிபுரியும் என் அலுவலகத்தின் பெயரில், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கை துவங்கிய மர்ம நபர், அதிலிருந்து எனக்கும், என்னுடன் பணிபுரியும் பெண் ஊழியர்கள் உட்பட பலருக்கும் ஆபாச தகவல்கள் பதிவிடுகிறார். ஆபாச பதிவுகளை நீக்குவதற்கு, 10 லட்சம் ரூபாயை கேட்டு மிரட்டுகிறார்.
இவ்வாறு புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்த வெங்கடேஷ், 25, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், வெங்கடேஷனின் பெண் தோழி ஒருவர், பிரபு பணிபுரியும் நிறுவனத்தில் வேலைக்காக, மூன்று லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தியுள்ளார்.
பிரபு உள்ளிட்டோர் வேலையும், பணத்தையும், பல மாதங்கள் கழித்து மன உளைச்சல் ஏற்படுத்திய பின், பணத்தை திரும்பி தந்தனர். இதனால் அவர்களை பழிவாங்கும் நோக்கில், வெங்கடேசன் இவ்வாறு செய்தது தெரிந்தது.