/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ கண்ணாடி உடைத்த வாலிபர் கைது
/
ஆட்டோ கண்ணாடி உடைத்த வாலிபர் கைது
ADDED : ஜூன் 30, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி:சென்னை, அய்யப்பன் நகர், ஆர்.கே.வில்லா 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கோபி, 50; ஆட்டோ ஓட்டுநர். இவர், வியாசர்பாடி, மார்க்கெட் ரோடு வழியாக ஆட்டோ ஓட்டி வந்தபோது, ஷாலினி, 18, என்பவர், ஆட்டோவை மறித்து, தன் கணவர் நித்திஷ் தன்னை அடிப்பதாகவும், தண்டையார்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனக்கூறி ஆட்டோவில் ஏறினார்.
ஆட்டோவை பின்னாடியே துரத்தி வந்த நித்திஷ், ஆட்டோவை மறித்து முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார். வியாசர்பாடி போலீசார் விசாரித்து, வியாசர்பாடி, 1வது பள்ள தெருவைச் சேர்ந்த நித்திைஷ, 19, நேற்று கைது செய்தனர்.