/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
/
வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
ADDED : ஏப் 22, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி, வேளச்சேரி மருதுபாண்டி சாலையில், சாலையோர கடை வைத்து பழ வியாபாரம் செய்பவர் அஜித், 23.
இவர், கடந்த 19ம் தேதி இரவு, வியாபாரத்தை முடித்துவிட்டு, வீட்டுக்கு புறப்பட்டு கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, 1,350 ரூபாயை பறித்து சென்றார்.
இதுகுறித்த புகாரின்படி, வேளச்சேரி போலீசார் விசாரித்ததில், வேளச்சேரி, டி.என்.எச்.பி., காலனியை சேர்ந்த நாகராஜ், 19, என தெரிந்தது.
நேற்று, நாகராஜை கைது செய்த போலீசார், குற்றச்செயலுக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.