/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணை ஆபாசமாக படமெடுத்த வாலிபர் கைது
/
பெண்ணை ஆபாசமாக படமெடுத்த வாலிபர் கைது
ADDED : நவ 05, 2025 01:27 AM

சென்னை: தனியார் வணிக வளாகத்தில், பெண்ணை ஆபாசமாக படமெடுத்த பீஹார் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெரியமேடு, ஈ.வி.ஆர்., சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில், 38 வயது பெண் பணிபுரிகிறார்.
இவர், நேற்று மதியம் அலுவலகம் அருகே உள்ள பொது கழிப்பறைக்கு சென்றார். அப்போது மர்மநபர் ஒருவர் கழிப்பறையின் கதவு இடையே, மொபைல்போனை வைத்து வீடியோ எடுத்துள்ளார்.
இதை பார்த்த அவர், உடனே வெளியே வந்தபோது மர்மநபர் தப்பியோட முயன்றார். அவரை, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்து, பெரியமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த நசுருதீன்கான், 25, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நசுருதீன்கான், அதே வணிக வளாகத்தில் உள்ள டீக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

