/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் ஆபாச பேச்சு வாலிபர் கைது
/
பெண்ணிடம் ஆபாச பேச்சு வாலிபர் கைது
ADDED : ஆக 08, 2025 12:09 AM
எம்.ஜி.ஆர்.நகர், பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
போரூர் அடுத்த சின்ன போரூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண், கணவர் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். இவர் பணி செய்யும் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வரும் ஜேம்ஸ், 24, என்பவரிடம், பணி நிமித்தமாக பேசியுள்ளார்.
இதை தவறாக புரிந்து கொண்ட ஜேம்ஸ், அப்பெண்ணிடம் ஆபாசமாக பேசியதுடன், 'வாட்ஸாப்'பிலும் மெசேஜ் அனுப்பினார். இதையறிந்த நிர்வாகம், ஜேம்ஸை பணியில் இருந்து நீக்கியது.
ஆத்திரமடைந்த ஜேம்ஸ், கடந்த 5ம் தேதி அந்நிறுவனத்திற்கு சென்று அப்பெண்ணை அவதுாறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.
இது குறித்து, எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், மேற்கு ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ், கைது செய்யப்பட்டார்.