/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் துாய்மை பணியாளரிடம் ஆபாசம் காட்டிய வாலிபர் கைது
/
பெண் துாய்மை பணியாளரிடம் ஆபாசம் காட்டிய வாலிபர் கைது
பெண் துாய்மை பணியாளரிடம் ஆபாசம் காட்டிய வாலிபர் கைது
பெண் துாய்மை பணியாளரிடம் ஆபாசம் காட்டிய வாலிபர் கைது
ADDED : நவ 11, 2025 12:29 AM

சாஸ்திரி நகர்: அடையாறு அருகே, சா லையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த துாய்மை பணியாளரை, ஆபாச சைகை காட்டி அழைத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூரைச் சேர்ந்த 50 வயது பெண், அடையாறு மண்டலம் 174வது வார்டில் துாய்மை பணியாளராக உள்ளார்.
நேற்று அதிகாலை, அடையாறு மேம்பாலம் கீழ்பகுதியில் சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், வாகனத்தில் இருந்து இறங்கி, திடீரென அவரது பேன்ட் ஜிப்பை கழற்றி, ஆபாச சைகை காட்டி பெண் துாய்மை பணியாளரை அழைத்துள்ளார்.
ஆத்திரமடைந்த அப்பெண், சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்த துடைப்பம் குச்சியால், அந்த நபரை சரமாரியாக அடிக்கவே, அந்த வாலிபர் தப்பித்தால் போதும் என பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான வாகனத்தின் எண்ணை வைத்து, அடையாறு மகளிர் போலீசார் விசாரித்தனர்.
இதில், ஆந்திராவைச் சேர்ந்த, போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பச்சு சாய் தேஜா, 25, என்பவர் என தெரிந்து, நேற்று அவரை கைது செய்தனர்.

