/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவனிடம் செயின் பறிப்பு இளைஞர் கைது
/
சிறுவனிடம் செயின் பறிப்பு இளைஞர் கைது
ADDED : ஏப் 27, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி:வியாசர்பாடி, கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் பபினா, 35. இவரது மகன் ஹரிஹரன், 17. இவர், நேற்று வியாசர்பாடி, கல்யாணபுரம் 1வது தெரு வழியாக பைக்கில் வந்தபோது, மது போதையில் நின்ற இளைஞர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பயந்து போன சிறுவன் ஒதுங்கி சென்ற நிலையில், போதை ஆசாமி அவரை தாக்கி, கழுத்தில் இருந்த ஒரு சவரன் செயினை பறிக்க முயன்றார். சிறுவன் செயினை பிடித்து கொள்ள, பாதி செயினை பறித்து கொண்டு ஆசாமி தப்பி சென்றார்.
இது குறித்து விசாரித்த வியாசர்பாடி போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட இ.எச்.ரோடு, புதுநகர் குடிசை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 20, என்பவரை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

