/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டியோ' ஸ்கூட்டியை திருடிய வாலிபர் கைது
/
'டியோ' ஸ்கூட்டியை திருடிய வாலிபர் கைது
ADDED : பிப் 10, 2025 03:54 AM

முகப்பேர்:முகப்பேர் மேற்கு, பாலமுருகன் தெருவைச் சேர்ந்தவர் விஜய், 27. தனியார் நிறுவன ஊழியர். இவர், தனது 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டியை, கடந்த ஏழாம் தேதி அதிகாலை, வீட்டின் வாசலில் நிறுத்தி விட்டு சென்றார்.
பின், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, ஸ்கூட்டி காணாமல் போனது தெரிந்தது. இது குறித்து, நொளம்பூர் போலீசில் விஜய் புகார் அளித்தார்.
அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' காட்களின் அடிப்படையில் விசாரித்தனர்.
அதில், ஸ்கூட்டியை திருடியது, பாடி, நேரு நகரைச் சேர்ந்த முத்துக்குமார், 28, என தெரிந்தது. அவரை கைது செய்து, திருடப்பட்ட ஸ்கூட்டியை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

