/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'யமஹா ஆர்15' பைக்குளை மட்டும் குறிவைத்து திருடிய வாலிபர் கைது
/
'யமஹா ஆர்15' பைக்குளை மட்டும் குறிவைத்து திருடிய வாலிபர் கைது
'யமஹா ஆர்15' பைக்குளை மட்டும் குறிவைத்து திருடிய வாலிபர் கைது
'யமஹா ஆர்15' பைக்குளை மட்டும் குறிவைத்து திருடிய வாலிபர் கைது
ADDED : ஜூன் 02, 2025 03:16 AM

கோயம்பேடு:அரும்பாக்கம், ஜெய் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன், 55. இவர், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன மேலாளர்.
இவர் கடந்த 25 ம் தேதி இரவு தன், 'யமஹா ஆர் 15' பைக்கை வீட்டு முன் நிறுத்தினார். மறுநாள் காலையில் பார்த்தபோது, பைக் திருடு போனது தெரியவந்தது.
கோயம்பேடு போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். பைக்கை திருடிய திருவண்ணாமலை மாவட்டம், ஜமீன் கூடலுாரை சேர்ந்த ஆல்பர்ட் ரோசாரியோ, 20 என்பவரை கைது செய்தனர்.
இவரிடமிருந்து, மூன்று 'யமஹா ஆர்15' பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
திருவண்ணாமலையில் இருந்து, ஆல்பர்ட் ரோசாரியோ, அரசு பேருந்தில் கோயம்பேடு வந்துள்ளார். ஆங்காங்கே நடந்து சென்று, வீட்டின்முன் நிறுத்தப்பட்டுள்ள யமஹா ஆர் 15 பைக்குகளை குறிவைத்துவிட்டு, நள்ளிரவில் திருடி சென்றுள்ளார்.
திருட்டு பைக்கை நன்றாக ஓட்டிவிட்டு விற்பதும், விற்க முடியாதவற்றை நண்பர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.