/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தங்க இடமளித்தவரின் மனைவியிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது
/
தங்க இடமளித்தவரின் மனைவியிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது
தங்க இடமளித்தவரின் மனைவியிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது
தங்க இடமளித்தவரின் மனைவியிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது
ADDED : ஏப் 06, 2025 10:36 PM
மதுரவாயல்:நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர் கணேஷ், 40; காவலாளி. இவர், மதுரவாயல், ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில், குடும்பத்துடன் தங்கி பணிபுரிகிறார். இவருக்கு அறிமுகமான நேபாளம் நாட்டைச் சேர்ந்த கேசப் புல், 40, என்பவரை, கணேஷ் அவரது வீட்டில் தங்க வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் கேசப் புல், உறங்கி கொண்டிருந்த கணேஷ் மனைவியின் தங்க செயினை பறிக்க முயன்றார். கணேஷ் சத்தம் போட்டதையடுத்து, கேசப் புல் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரித்த போலீசார், கொருக்குப்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த கேசப் புல்லை, கைது செய்தனர்.