/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் எஸ்.ஐ., கைைய முறுக்கிய வாலிபர் கைது
/
பெண் எஸ்.ஐ., கைைய முறுக்கிய வாலிபர் கைது
ADDED : ஜன 03, 2025 12:13 AM
சென்னை, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூஜா, 29. அவர் திருவல்லிக்கேணி மகளிர் காவல் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில், காவலர் சுப்புலட்சுமியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக பின்னால் வந்தஇருசக்கர வாகன ஓட்டி, காவலர் சுப்புலட்சுமியின் காலில் மோதியுள்ளார். வலி தாங்க முடியாமல் துடித்த அவர், வாகன ஓட்டியை பார்த்து, 'ஏய்... பார்த்து வரமாட்டியா' எனக் கேட்டுள்ளார்.
இதில், இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தகராறில் ஈடுபட்ட வாகன ஓட்டியின் சாவியை எடுக்க, எஸ்.ஐ., பூஜா முற்பட்டார்.
இதை கவனித்த வாகன ஓட்டி, எஸ்.ஐ.,யின் கையை பிடித்து முறுக்கி உள்ளார்.  சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார், எஸ்.ஐ.,யின் கையை முறுக்கிய வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், ராயப்பேட்டை, வி.எம்.தெருவைச் சேர்ந்த உமர் உசேன், 24 என்பதும், அவரது தந்தை சென்னை துறைமுகத்தில், கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
போலீசார், உமர் உசேனை கைது செய்து, மேலும் ஏதேனும் வழக்குகளில் அவருக்கு தொடர்பு உள்ளதா என, விசாரித்து வருகின்றனர்.

