/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் பெங்களூரில் கைது
/
பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் பெங்களூரில் கைது
ADDED : நவ 02, 2025 12:36 AM

அம்பத்துார்: அம்பத்துார், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி, 43. இவர், கடந்த 25ம் தேதி வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றபோது, அவ்வழியாக பைக்கில் வந்த நபர், மீனாட்சி அணிந்திருந்த, 18 கிராம் தாலி செயினை பறித்து தப்பினார்.
மீனாட்சி கொடுத்த புகாரின்படி, அம்பத்துார் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மீனாட்சியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை, அம்பத்துார் போலீசார், பெங்களூரில் வைத்து கைது செய்து, நேற்று முன்தினம் அம்பத்துார் அழைத்து வந்தனர்.
விசாரணையில், அம்பத்துார், கள்ளிக்குப்பம், முருகம்பேடு பகுதியைச் சேர்ந்த அஜய் என்கிற அஜித்குமார், 27, என, தெரிந்தது.
கடந்த ஜூலை மாதம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதால், அம்பத்துார் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 10ம் தேதி, புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அஜய், அன்றைய தினமே அம்பத்துார், பிரித்விபாக்கம் பகுதியில் நடந்து சென்ற நபரிடம், மொபைல் போனை பறித்து தப்பியுள்ளார்.
பின், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில், இரண்டு பைக்கை திருடியுள்ளார்.
அதேபோல், புழல் பகுதியிலும் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். பைக், மொபைல் போன் விற்ற பணத்தில், பெங்களூருக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் கைதான போது, தனக்கு சிறையில் இருப்பது தான் பிடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அம்பத்துார் குற்றப்பிரிவு போலீசார், அஜயை கைது செய்து, அவரிடம் இருந்த மீனாட்சியின் 18 கிராம் தாலி செயினை பறிமுதல் செய்தனர்.

