UPDATED : அக் 09, 2026 09:11 PM
ADDED : அக் 09, 2026 09:08 PM
அ நிறம் | அளவு
கோயம்பேடு: முதியவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோயம்பேடு, நியூ காலனியைச் சேர்ந்தவர் மோகன், 68. இவர், குளிர்பான கடை நடத்தி வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு கடைக்கு வந்த நபர், குளிர்பானம் அருந்தி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றார். இதை மோகன் தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த நபர், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.
கோயம்பேடு போலீசாரின் விசாரணையில், கடலுார் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த தினேஷ், 25, என்பதும், அவர் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிவதும் தெரியவந்தது.
இதையடுத்து, தினேஷை போலீசார் நேற்று கைது செய்தி சிறையில் அடைத்தனர்.
