/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி
/
காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி
ADDED : டிச 10, 2024 12:23 AM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு மதுபோதையில் வந்த புதுாரைச் சேர்ந்த குமார், 38, என்பவர், 'ஒருவர் தன்னை, கல்லால் தாக்க வருகிறார்; காப்பாற்றுங்கள்' என, போலீசாரிடம் உதவி கேட்டுள்ளார்.
விசாரணையில், புளியந்தோப்பு காவல் நிலையம் அருகே, பேருந்து நிறுத்தத்தில் குமார் நின்றிருந்த போது, அங்கு வந்த ஒருவர் '10 ரூபாய்' கேட்டுள்ளார். குமார் தர மறுக்கவே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து குமாரை அடிக்க, அந்த நபர் கல்லுடன் பாய்ந்தது' தெரியவந்தது.
காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் காமராஜ், கல்லை எடுத்து அடிக்க வந்த நபரை எச்சரித்து அனுப்பினர். பின் குமாரிடம் விசாரித்தனர்.
அப்போது, என்னை அடிக்க வந்தவனை விட்டு விட்டு, என்னிடம் ஏன் விசாரிக்கிறீர்கள்' எனக் கேட்டு, தான் வைத்திருந்த கத்தியால் கையை அறுத்து கொண்டார்.
போலீசார் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து, முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

