/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் அத்துமீறல் வாலிபர் பிடிபட்டார்
/
பெண்ணிடம் அத்துமீறல் வாலிபர் பிடிபட்டார்
ADDED : ஏப் 06, 2025 10:38 PM
ஏழுகிணறு:ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் கடந்த 4ம் தேதி இரவு, ஏழுகிணறு தெருவில் நடந்து சென்ற போது, அங்கு நின்றிருந்த உசேன் பாஷா, 19, என்பவர், வீண் தகராறு செய்து கையால் தாக்கியுள்ளார்.
மேலும், தகாத வார்த்தைகளால் பேசி, அவரது ஆடையை பிடித்து இழுத்து, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார்.
ஏழுகிணறு போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட ஏழுகிணறு, குட்டி மேஸ்திரி தெருவைச் சேர்ந்த உசேன் பாஷாவை, கைது செய்தனர்.
இவர், ஏற்கனவே கடந்த 4ம் தேதி, ஏழுகிணறு, கிரிகோரி தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காரை, கல்லால் உடைத்து சேதப்படுத்திய வழக்கிலும், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

