/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்கூட்டியை திருட முயன்று சிக்கிய வாலிபர்
/
ஸ்கூட்டியை திருட முயன்று சிக்கிய வாலிபர்
ADDED : ஜூன் 23, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு:பட்டாளம், மசூதி தெருவைச் சேர்ந்தவர் நியாமதுல்லா, 44; இறைச்சிக்கடை உரிமையாளர். வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த இவரது 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டியை, நேற்று அதிகாலை வாலிபர் ஒருவர் திருட முயன்றுள்ளார்.
சத்தம் கேட்டு எழுந்து வந்த நியாமத்துல்லா, வாலிபரை மடக்கி பிடித்து, புளியந்தோப்பு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில், புளியந்தோப்பு, திரு.வி.க., நகரைச் சேர்ந்த சம்சுதீன், 19, என்பதும், இவர் மீது திருட்டு உட்பட மூன்று வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. சம்சுதீனை கைது செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.