/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ பணித்தளத்தில் வாலிபர் தற்கொலை
/
மெட்ரோ பணித்தளத்தில் வாலிபர் தற்கொலை
ADDED : பிப் 02, 2025 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி:மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் தீபக்கைபட்டூர், 26. ஓ.எம்.ஆர்., நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில், மெட்ரோ ரயிலுக்கான கட்டுமான பணித்தளத்தில் சூப்பர்வைசராக பணி புரிந்தார்.
திருமணமாகி, 4, 2 வயதில், இரு குழந்தைகள் உள்ளனர். இவரது குடும்பம், மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ளது.
கடந்த சில வாரங்களாக, தீபிக்கைபட்டூர் முறையாக பணி செய்ய முடியாமல், மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை, பணித்தளத்தில் தங்கி இருந்த கொட்டகையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

