/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளைஞர் தின மாரத்தான் 1,600 பேர் பங்கேற்று உற்சாகம்
/
இளைஞர் தின மாரத்தான் 1,600 பேர் பங்கேற்று உற்சாகம்
இளைஞர் தின மாரத்தான் 1,600 பேர் பங்கேற்று உற்சாகம்
இளைஞர் தின மாரத்தான் 1,600 பேர் பங்கேற்று உற்சாகம்
ADDED : ஜன 13, 2025 02:00 AM

சென்னை:சென்னை, ராமகிருஷ்ணா மடம் சார்பில், விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, 1,600 பேர் பங்கேற்ற இளைஞர் தின மாரத்தான் நடந்தது.
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜன., 12ஐ, இளைஞர்கள் தினமாக மத்திய அரசு கடைபிடிக்கிறது.
அந்த வகையில், சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில், சென்னை, விவேகானந்தர் இல்லத்தில் இருந்து, நேற்று அதிகாலை, மாரத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை, சுவாமி சத்யநானந்தா துவக்கி வைத்தார்.
விவேகானந்தர் இல்லத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை 3.5 கி.மீ., விவேகானந்தர் இல்லத்தில் இருந்து போர் நினைவுத்துாண் வரையிலான 7.5 கி.மீ., மற்றும் ஆர்.பி.ஐ., வரை சென்று திரும்பும் வகையில், 10 கி.மீ., ஆகிய துாரங்களில் நடத்தப்பட்டது.
இதில், 3.5 கி.மீட்டரில் 900 பேர், 7.5 கி.மீட்டரில் 400 பேர், 10 கி.மீட்டரில் 300 பேர் பங்கேற்றனர்.
நிறைவாக, 3.5 கி.மீ., மாரத்தானில், கிரிதரன், அஜய், திருநாவுக்கரசு மற்றும் ஹரிவர்ஷா, ஷண்மதி, முகிலமுது ஆகியோரும், 7.5 கி.மீட்டரில் கபிலன், ரித்திக், சந்திர ரோகன் மற்றும் தீபிகா, அனாமிகா, மமிஷனேஸ்வரி ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
அதேபோல், 10 கி.மீ., மாரத்தானில் விக்னேஷ், ஷாகுல் அமீத், சுடர் மற்றும் கிருஷ்ணவேணி, ரெஜினா, ரம்யாசெல்வன் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.