ADDED : ஜன 30, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன், 35. மெக்கானிக். சில தினங்களுக்கு முன் அவரது கடைக்கு அருகே, சிலர் பட்டாக்கத்தியால் 'கேக்' வெட்டி கொண்டாடி உள்ளனர்.
இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தததால், சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின் ஜாமீனில் வெளியே வந்தவர்கள், மெக்கானிக்கிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மீண்டும் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மெக்கானிக் புகார் அளித்துள்ளார்.
ஆனால், புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி, நேற்று கமிஷனர் அலுவலகம் முன் குடும்பத்துடன் சரவணன் தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம் மனுவை பெற்ற வேப்பேரி போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.