/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு
/
அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஜன 16, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழவேற்காடு, புழல் சிறைக்காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ், 23. இவர், நேற்று மாலை, நண்பர்களுடன் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார்.
அங்குள்ள பழைய சாட்டன்குப்பம் மீனவப் பகுதியில் கடலில் நண்பர்களுடன் குளித்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது ராட்சத அலையில் சிக்கி, மோசஸ் நீரில் மூழ்கினார். சிறிது நேரத்தில் இறந்த நிலையில், அவரது உடல் கரை ஒதுங்கியது.
திருப்பாலைவனம் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.