/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரிக்கெட்டில் தகராறு வாலிபருக்கு வெட்டு
/
கிரிக்கெட்டில் தகராறு வாலிபருக்கு வெட்டு
ADDED : ஆக 08, 2025 12:11 AM
துரைப்பாக்கம், கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில், வாலிபரை வெட்டிய 10 பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஓ.எம்.ஆர்., மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 22. இவர், கண்ணகிநகரில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அந்த குழுவில் இருந்த சஞ்சய், 22, அஜய், 22, ஆகியோர், அருண்குமாரின் பேட்டை எடுத்து, கல் வீசி அடித்து விளையாடியதாக கூறப்படுகிறது. இதில், இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சஞ்சய், நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் அருண்குமாரின் தலையில் வெட்டினர். இதில், அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு, எட்டு தையல் போடப்பட்டுள்ளது.
துரைப்பாக்கம் போலீசார், சஞ்சய், அஜய் உள்ளிட்ட பத்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடுகின்றனர்.