UPDATED : அக் 15, 2026 12:17 AM
ADDED : அக் 15, 2026 12:14 AM
அ நிறம் | அளவு
படப்பை: படப்பை அருகே மின்னல் தாக்கி, மேற்கு வங்க இளைஞர் ஒருவர் பலியானார்; மற்றொரு வாலிபர் பலத்த காயமடைந்தார்.
படப்பையை அடுத்த மாடம்பாக்கம், குத்தனுார் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
அங்கு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷேக் கிஷ்மோத், 25, ராஜ், 24, ஆகிய இருவர், மூன்று மாதங்களாக தங்கி, கட்டட பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாலை, கட்டடத்தின் முதல் மாடியில் தரை போடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மழை பெய்தது.
அப்போது, இருவர் மீது மின்னல் தாக்கியது. இதில்,ஷேக் கிஷ்மோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜ் காயமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து, மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
