/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழுத்தறுத்து வாலிபர் படுகொலை சேலையூரில் துணிகரம்
/
கழுத்தறுத்து வாலிபர் படுகொலை சேலையூரில் துணிகரம்
ADDED : ஜன 01, 2025 12:53 AM
சேலையூர், சேலையூர் அடுத்த மப்பேடு - ஆலப்பாக்கம் பிரதான சாலையில், புத்துார் அருகே காலி இடத்தில், கை, கால் கட்டப்பட்டு கழுத்தறுக்கப்பட்ட நிலையில், நேற்று காலை வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது:
கொலை செய்யப்பட்ட நபர், சேலையூர், இந்திரா நகரைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் சூர்யா, 21, என்பதும், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதும் தெரிய வந்தது.
மேலும், 16 வயது சிறுமியிடம் அத்துமீறியதாக, சிட்லப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கும் உள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, சூர்யா மது அருந்த சென்ற 'டாஸ்மாக்' கடை மூடப்பட்டிருந்தது. அப்போது, வேறு பகுதிக்கு சென்று மது அருந்தலாம் எனக்கூறி, சூர்யாவை மூன்று பேர் ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர்.
மதுபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், சூர்யாவை சரமாரியாக தாக்கி, கை கால்களை கட்டி, அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
பின், ஆட்டோவில், உடலை மப்பேடு பகுதிக்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்.
இந்த கொலை, போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, மூவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

