/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூதாட்டியை கொன்று துாக்கில் தொங்கவிட்ட வாலிபர்கள் கைது
/
மூதாட்டியை கொன்று துாக்கில் தொங்கவிட்ட வாலிபர்கள் கைது
மூதாட்டியை கொன்று துாக்கில் தொங்கவிட்ட வாலிபர்கள் கைது
மூதாட்டியை கொன்று துாக்கில் தொங்கவிட்ட வாலிபர்கள் கைது
ADDED : ஏப் 26, 2025 12:26 AM

போரூர், போரூர், ஆர்.இ., நகரைச் சேர்ந்தவர் காந்திமதி, 71. இவரது வீட்டில் அஜய், 21, என்ற வாலிபர், தாய் மற்றும் சகோதரியுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். மற்றொரு வீட்டில், காந்திமதியின் மகன் பிரேம் சங்கர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த 23ம் தேதி இரவு வெகுநேரமாகியும் காந்திமதி வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது மகன் வீட்டிற்குள் சென்று பார்த்தார். வீட்டின் ஹாலில் துாக்கில் தொங்கிய நிலையில், காந்திமதி இறந்து கிடந்தார்.
போரூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த, 3 சவரன் நகை திருடப்பட்டிருந்ததும், தலையில் காயமடைந்திருந்ததையும் கவனித்த போலீசார், மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து, அக்கம்பக்கத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதேநேரம், காந்திமதியின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த அஜய் என்பவர் தலைமறைவானார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில், சம்பவத்தன்று வீட்டை காலி செய்யுமாறு காந்திமதி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, ஆத்திரத்தில் காந்திமதியை தள்ளிவிட்டுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, அஜய், நண்பர் யாசர் அராபத் உதவியுடன் காந்திமதியை துாக்கில் தொங்கவிட்டு, அவர் அணிந்திருந்த 3 சவரன் செயினுடன் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், 3 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

